திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள். வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மழை வேண்டி வனப்பகுதி நந்தி பகவானை வழிபட்ட மக்கள்.வழிபட்ட ஒரு மணி நேரத்தில் பெய்த மழை.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


ஆம்பூர் அருகே உள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி மத்தூர் கொல்லை. இந்த ஊருக்கு மேற்கே காரப்பட்டு காப்புக் காடுகள் உள்ளது. காப்பு காடுகளின் எல்லையில் நந்தி சுனை என்னும் நீர்நிலை பகுதி உள்ளது. இங்கு ஒரு பாறையின் மீது நந்தி பகவான் சிலையும் அங்கிருந்து 30 மீட்டர் தொலைவில் சப்தகன்னியர்கள் எனக் கூறப்படும் வழிப்பாட்டு தலமும் உள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமையில் நந்தி பகவானையும் , இந்த சப்த கன்னியரையும் வழிபட்டால் மழை வரும் என்பது இப்பகுதி மக்களின் ஐதீகம். இங்குள்ள சுவாமி சிலைகளுக்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்து பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிப்படுவது குறிப்பிடத்தக்கது.



இன்று மழை வேண்டி இங்குள்ள நந்தி பகவானையும் சப்தகன்னியரையும் பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்தப் பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.நந்தி பகவானையும் சப்தகன்னி கரையும் வழிபட்ட பொதுமக்கள் அனைவரும் வீடுகள் திரும்பினர்.


Popular posts
டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
Image
கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது
என் மனதை மிகவும் பாதித்துள்ளது - விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image