டெல்லி ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய போலீசார் - 144 தடை உத்தரவு எதிரொலி
" alt="" aria-hidden="true" />

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக இவர்களின் போராட்டம் நீடித்தது.

 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் டெல்லி முடக்கப்பட்டு, வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை போலீசார் இன்று அப்புறப்படுத்தினர். 


 


இதுபற்றி துணை கமிஷனர் (தென்கிழக்கு) ஆர்.பி.மீனா கூறுகையில், ‘கொரோனா அச்சம் காரணமாக டெல்லி முடக்கப்பட்டிருப்பதால், ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற மறுத்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Popular posts
கொரோனவை ஒழிக்கும் சக்தி உள்ள ஒரே நாடு - உலக சுகாதார அமைப்பு கூறும் நாடு எது
என் மனதை மிகவும் பாதித்துள்ளது - விசு மறைவுக்கு ரஜினி இரங்கல்
Image
வாணியம்பாடியில் நடந்து சென்ற முதியவர் திடீரென மயங்கி விழுந்து வலிப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை பார்வையிட சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Image
தென்காசி இளைய பாரதம் அமைப்பின் சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது
Image