வரதட்சனை கொடுமையால் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பல்லவராயன் பட்டியை சேர்ந்தவர் லாவண்யா இவருக்கு சதீஸ்குமார் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவர் சதீஷ்குமார் லாவண்யா விடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்திவந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் மனமுடைந்த லாவண்யா கணவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த இறப்பிற்க்கு தனது மருமகன் சதீஸ்குமார் என்பவரும். அவரது குடும்பத்தாருமே காரணம் என்றும் அவரது குடும்பத்தார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. உயிரிழந்த லாவண்யாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இந்தசம்பவம் குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் லாவண்யாவின் மர்மமானஇறப்பு சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..தேனி மாவட்ட செய்திக்காக