" alt="" aria-hidden="true" />
கொரோனாவில் இருந்து இந்திய மக்களை காக்க கியூபாவிடம் மருந்துவ ஆலோசனை கேட்க வேண் என மத்திய அரஅக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் , இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்
உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் சூழலில், தற்போது வரை 415 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்கனவே 7 பேர் பலியாகியிருந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகிலுள்ள டம்டம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர் இன்று உயிரிழந்தார். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 67 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 30 பேரும், உத்தர பிரதேசத்தில் 28 பேரும், குஜராத்தில் 29 பேரும், பஞ்சாபில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டு பிடிக்காத நிலையில், கியூபாவில் இதற்கான மருந்து உள்ளதாக தெரிகிறது.கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு கப்பலில் சிக்கி தவித்த 600 பயணிகள் உலக நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய தடை விதித்த நிலையில், இந்த கப்பலை கியூபா நாடு தத்தெடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்ட பயணிகள் தற்போது நலம் பெற்று வருவதாக தெரிகிறது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவினாலும், தற்போது சீனாவை விட இத்தாலி நாட்டில் இந்த வைரஸால் பாதிக்கபட்டுள்ளவர் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் பல்லாயிரகணக்கனோர் இத்தாலியில் பலியாகி உள்ளனர்.
தற்சமயம் இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபா நாட்டை சேர்ந்த 36 மருத்துவர் கொண்ட குழு இத்தாலி பயணம் மேற்கொண்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து தங்களிடம் உள்ளதாக கியூபா அறிவித்த போதிலும், கியூபா மீது பல ஆண்டுகளாக அமெரிக்கா விதித்துள்ள பொருளதார தடை காரணமாக இந்த மருந்தை பெற முடியாத நிலை உள்ளது. தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இந்திய மக்களை காக்கும் பொருட்டு கியூபா நாட்டில் இருந்து மருந்து உட்பட மருத்துவ ஆலோசனைகளை பெற மத்திய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்