ஜெனீவா:
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது:-
2 மெல்லக்கொல்லும் நோய்களை நாட்டில் இருந்து ஒழித்ததில் இந்தியா உலகுக்கே முன்னிலையாக விளங்கியது. பெரிய அம்மை நோயை ஒழித்து உலகுக்கு சிறந்த பரிசை வழங்கியது. போலியோவையும் இந்தியா ஒழித்துவிட்டது. எனவே இந்தியாவுக்கு வியக்கத்தக்க திறன் இருக்கிறது.
இந்தியா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பது குறித்து என்ன செய்ய வேண்டும் என்று உலகுக்கு காட்ட வேண்டும். இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்பதற்கு எளிதில் பதில் சொல்ல முடியாது. இதற்கு முன்பு செய்ததுபோல இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்